மன அழுத்தத்தை போக்க வைக்கும் நவீன ஒலி சிகிச்சை முறை!!
மன அழுத்தத்தை போக்க வைக்கும் நவீன ஒலி சிகிச்சை முறை!! நமது அறிவியல், மருத்துவம் மற்றும் இதிகாசத்தில், ஒலிக்கு குணப்படுத்தும் இயல்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றிற்கான சான்றுகளும் இருக்கின்றன. அமெரிக்கர்களும், ஆப்ரிக்கர்களும் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நோய்களை குணப்படுத்தியுள்ளனர். இசையின் சின்னத்தை, சீனர்கள் மருத்துவ சின்னத்தோடு இணைத்திருப்பர். இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காகவும், இதய துடிப்பை சீராக்கவும் சில வகை ஒலிகள் பயன்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம்மில் பலர் மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில் நம்மை அறியாமல், இசையை கேட்க தொடங்குவோம். இசை நமது மனதை தளர்த்தி ஆசுவாசப்படுத்துகிறது என்று உணர்கிறோம். ஒலியின் குணப்படுத்தும் இயல்பு: ஒலியின் குணப்படுத்தும் ஆற்றலை தெரிந்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஒருவரை கீழே அமர செய்து, அவரின் காதுகளில் ஒரு ஹெட் போன் மாட்டப்பட்டு, இசையை கேட்க செய்தனர். இந்த செயல் அவர் மனதை தளர்த்தியதாகவும், இது ஒரு தியானத்தை போல் இருந்ததாகவும் கூறினார். இசையில் உள்ள ஒலிகள் மற்றும் அதிர்வுகள் கவனத்தை ஒருங்கிணைத்தது...